Connect with us

ஜார்ஜ்பொன்னையாவை விடுவிக்க கோரிய வன்னி அரசுக்கு கஸ்தூரி பதிவு செய்த டுவிட்!

Tamil Nadu

ஜார்ஜ்பொன்னையாவை விடுவிக்க கோரிய வன்னி அரசுக்கு கஸ்தூரி பதிவு செய்த டுவிட்!

392551c438724c0363cc1fe301a95e61-1

பாரதமாதா குறித்தும் அரசியல் தலைவர்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஜார்ஜ் பொன்னையா சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பதும் அவருக்கு உடல் நலக்கோளாறு காரணமாக தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் பிரமுகர் வன்னி அரசு என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஜார்ஜ் உடல் நலத்தை கணக்கில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கைது செய்யப்பட்டுள்ள அருட்தந்தை ஜார்ஜ்பொன்னையா அவர்களுக்கு ஏற்கனவே, இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு #செயற்கைஇதயமுடுக்கி பொருத்தப்பட்டுள்ளது. வயதையும் உடல்நலத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு அருட்தந்தையை பிணையில் விடுவிக்க வேண்டும்.

வன்னியரசு டுவிட்டுக்கு பதிலளித்த நடிகை கஸ்தூரி பதிவு செய்த டுவிட்டில் கூறியிருப்பதாவது: அது எப்படி இந்த அரசியல்வாதிகளுக்கு , கிரிமினல்களுக்கு, தேசத்துரோகிகளுக்கு எல்லாம் குற்றம் செய்யும் போது சூப்பரா வேலை செய்யுற இதயம்  சரியாய் அரெஸ்ட்டு சமயத்துல மட்டும் நெஞ்சு வலி வந்துருது? என்று பதிவு செய்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top