அண்ணாத்த’வுக்கு ஒரு நியாயம், மாநாடுக்கு ஒரு நியாயமா? கஸ்தூரி கேள்வி

அண்ணாத்த படத்திற்கு ஒரு நியாயம் மாநாடு படத்திற்கு ஒரு நியாயமா என நடிகை கஸ்தூரி தனது முகநூல் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

திரையரங்குகள் உள்பட பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அவசியம் என தமிழக சுகாதாரத்துறை நிபந்தனை விதித்துள்ளது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏற்கனவே தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் கூறிய நடிகை கஸ்தூரி கூறியபோது, ‘திரையரங்குகளில் செல்பவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி போட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கும் தமிழக அரசு நிபந்தனை மிகச் சரியானது தான். ஆனால் அதே நேரத்தில் இந்த நிபந்தனையை ரஜினியின் அண்ணாத்த திரைப்படம் வெளியானபோது அமல்படுத்தி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார்

மேலும் அண்ணாத்த படத்தால் தான் மாநாடு திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகவில்லை என்று கூறப்பட்ட நிலையில் அதை தற்போது உறுதி செய்யும் வகையில் மாநாடு படத்தை வெற்றி பெற செய்யாமல் செய்யும் நடவடிக்கையாகவே இந்த தடுப்பூசி நடவடிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

ஆஸ்திரேலிய உள்ளிட்ட பல நாடுகளில் திரையரங்குகளுக்கு செல்பவர்கள் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்ட நிலையில் அதே நிபந்தனை தமிழகத்திலும் விதிக்கப்பட்டிருப்பது நல்ல நடைமுறை தான் என்றாலும் அதை எப்பொழுது நடைமுறைப்படுத்துவது என்பதில் பாரபட்சம் இருப்பதால் தான் சந்தேகம் எழுகிறது என்றும் கஸ்தூரி கூறியுள்ளார்

 

kasturi facebook

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment