Connect with us

பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார் கஸ்தூரி!!!

Entertainment

பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார் கஸ்தூரி!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வார இறுதி எப்போதும் மிக சுவாரஸ்யமான ஒன்றாக இருக்கக்கூடியது, வாரம் முழுவதும் நிகழ்ச்சியினைப் பார்க்காதவர்கள்கூட, கமல் ஹாசன் வருகையை நோக்கி வார இறுதியில் தவறாமல் பார்ப்பர். அதற்கேற்ப நிகழ்ச்சியும் வார இறுதியில்  பார்க்க ஒருநிமிடம்கூட போரடிக்காத வகையில் இருக்கும்.

வார இறுதி அப்டின்னாவே எலிமினேஷன் தான் என்பது தெளிவாகத் தெரிந்த ஒன்றுதான். நேற்றைய நிகழ்ச்சியில் எலிமினேஷனை எட்டியபோது அனைவரும் சற்று கூடுதல் பதற்றத்துடனே இருந்தனர்.

4dabca2aa4d9a71d409fc6e1cea80b1e

அப்போது எதிர்பார்த்ததைபோல தர்சன் மற்றும் சாண்டி காப்பாற்றப்படுவதாக அறிவித்தார். இவர்கள் இருவரும் தவறே செய்தாலும் மக்களின் அதிக அளவிலான ஆதரவினைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வார நாமினேஷன் பட்டியலில் இருந்தது சாண்டி, தர்சன், சேரன் மற்றும் கஸ்தூரி ஆகியோர் ஆவர்.  வெளியேறப் போவது சேரனா அல்லது கஸ்தூரியா? என்ற கேள்விதான் நாமினேட் செய்யப்பட்ட நாளிலிருந்தே எல்லோர் மனதிலும் உதித்தது.

சேரன் மிக நேர்மையானவராக வீட்டிற்குள் இருந்துவருகிறார், இருப்பினும் இவருக்கு அதிக அளவில் மக்கள் சப்போர்ட் செய்யாமல் இருந்தனர், ஆனால் தற்போது அவரைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டதனால், சேரனுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.

நுழைந்து 17 நாட்களே ஆகிய நிலையில் கஸ்தூரி இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top