Connect with us

புரட்டாசி துவக்கம்! வெறிச்சோடியது காசிமேடு மீன்சந்தை!!

fish market

தமிழகம்

புரட்டாசி துவக்கம்! வெறிச்சோடியது காசிமேடு மீன்சந்தை!!

சென்னை காசிமேடு மீன்சந்தையில் விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டமானது அதிகமாக இருக்கும். இந்நிலையில் இன்று முதல் புரட்டாசி மாதம் துவக்கத்தின் காரணமாக குறைந்த அளவில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது.

இருப்பினும் மீன்களின் விலையானது அதிகமாகவே உள்ளது. அதன் படி, வஞ்சரம் மீன் ரூ.1500 வரையில் விற்பனையாகிறது. சங்கரா ரூ.400, கடம்பா ரூ. 400, டைகர் இறால் ரூ.1000 மற்றும் வவ்வால் ரூ.200 என விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் பாறை, நெத்திலி உள்ளிட்ட மீன்களின் விலையானது ரூ.600, நண்டு ரூ.400 என விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே மீன்களின் விலையானது கிடுகிடுவென உயர்ந்து இருப்பதால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும், மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாலும்,  புரட்டாசி மாதம் துவங்குவதாலும்  மந்தமான வியாபாரம் காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top