காஷ்மீர் பண்டிட் சுட்டுக்கொலை: பொதுமக்கள் போராட்டம்..!!

கடந்த சில ஆண்டுகளாகவே காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் பண்டிட்கள் சுட்டுக்கொலை செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் சௌத்ரி குந்த் பகுதியில் பூரான் கிருஷான் பட் என்பவர் சில தினங்களுக்கு முன் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இத்தகைய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஒற்றை தலைமை!! சபாநாயகர் எடுக்கும் முடிவு… ஓபிஎஸ் அதிரடி..!!

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 7 பண்டிட்கள் மீது தாக்குதல் நடைப்பெற்றதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இதன் காரணமாக பூரான் கிருஷான் பட் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment