Connect with us

தன்னைத் தானே திருமணம்!! ஹனிமூன் தேதியை வெளியிட்ட கஷ்மா!!

slogamey 16547637323x2 1

செய்திகள்

தன்னைத் தானே திருமணம்!! ஹனிமூன் தேதியை வெளியிட்ட கஷ்மா!!

குஜராத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு தானே திருமணம் செய்து கொண்ட சம்பவம் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்தவர் 24-வயதான ஷாமா பிந்து. இவர் வெப் சீரிஸ்களில் நடித்திருப்பதாக கூறப்படுகிரது. இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே திருமணம் மீது விருப்பமில்லாமல் இருந்ததாகவும், இருப்பினும் தன்னை மணமகளாக பார்க்க வேண்டும் என்ற ஒரு ஆசை இருந்து வந்ததாக கூறப்படுகிரது.

ஆனாலும் திருமணம் செய்துகொள்வதில் மணமகன் வேண்டாம் என்பதில் தெளிவாக இருந்ததாகவும், இதனை பெற்றோரிடம் அதை சொல்ல அவர்களும் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பின்னர் மண்டபம் புக் செய்த ஷாமா பின்னர் மணமகளாக அலங்கரித்துக் கொண்டு தனக்கு தானே குங்குமம் வைத்து தன்னையே திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் கோவாவிற்கு 2 வாரம் சிங்கிளாக ஹனிமூன் செல்ல திட்டமிட்ட அவர் வருகின்ற ஆகஸ்ட் 7-ஆம் தேதி செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு புதிதாக திருமணமான மற்றவர்களைப் போலவே தானும் திருமண வாழ்க்கையை என்ஜாய் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top