கரூரில் அதிர்ச்சி! மூதாட்டி மீது விழுந்த கட்டிடம்..!!!

கரூர் மாவட்டம் அரவகுறிச்சி கடைவீதி பகுதியில் பழமையான கட்டிடம் பழுதான நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் பாத்துமா கவி ( வயது 74) மூதாட்டி தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம் போல் வீட்டில் உள்ள குப்பைகளை கொட்டும் போது பழமையான கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அடுத்த 3 மணி நேரத்தில்… எந்தெந்த மாவட்டங்களில் மழை?

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 2 பொக்லைன் உதவியுடன் மூதாட்டியை மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மீட்கும் பணி நடைப்பெற்று வருகிறது.

அதே போல் மூதாட்டியின் நிலைமை குறித்து தற்போது வரையில்தெரியவில்லை. அதோடு மூதாட்டி யார்? அவரது உறவினர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கு: சென்னை ஐகோர்ட் புதிய உத்தரவு!

மேலும், குப்பை கொட்டும் போது பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.