செவ்வாய்க்கு உரிய கருங்காலி குச்சி மற்றும் மாலையின் பயன்கள்

ஆன்மிக ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் ஸ்படிக மாலை அணிவதை பற்றி சில நாட்களுக்கு முன் பார்த்தோம். தற்போது ஆன்மிக ரீதியாக உள்ள கருங்காலி மாலை பற்றி பார்க்க இருக்கிறோம்.

பொதுவாக கருங்காலி மரம் எதையும் இழுத்து வைத்துக்கொள்ளும் தன்மையுடையது. மின்னல் தாக்கினாலும் அந்த மரம் சேதமடையாது, காரணம் என்னவென்றால் அந்த மரம் இயல்பிலேயே மிகவும் உறுதியானது.

உறுதியான ஒருவரை நல்லா கருங்காலி கட்டை மாதிரி இருக்கானே என நக்கலாக நம்ம ஊர் வழக்கத்தில் சொல்வதுண்டு. அது போல கருங்காலி மரம் பல சிறப்புகளை கொண்டது. கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட மாலை அணிந்தால் எந்த வித பிரச்சினைகளையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவராக நாம் விளங்கலாம். மன உறுதி நமக்கு மிக அதிகமாக ஏற்படும்.

நவக்கிரகங்களில் செவ்வாய் மிக வலுவான வேகமான கிரகம் ஆகும். அந்த கிரகத்துக்குரிய மாலை கருங்காலி மாலை. இந்த மாலை அணிவதால் செவ்வாய் பகவானின் காரகத்துக்குரிய அனைத்து நன்மைகளையும் பெற்றுத்தரும்.

கருங்காலி மாலை ஒரிஜினல் மாலையாக நன்கு தேர்ந்த சிறந்த வியாபாரிகளிடம் வாங்க வேண்டும். போலியான மாலை அணிந்தால் பலன் கிடைக்காது.

கருங்காலி மாலை மட்டுமல்லாது கருங்காலி குச்சியும் பயனுள்ளது. இது தீயசக்திகளை எதிர்த்து நிற்கும். வீட்டின் பூஜையறையில் இந்த குச்சியை வைத்தால் குலதெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கும். எந்த பிரச்சினை என்றாலும் அது வந்த இடம் காணாமல் போய்விடும்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment