News
கருணாசை அடுத்து அவருடன் நடித்த நடிகைக்கும் கொரோனா: அதிர்ச்சி தகவல்

நடிகரும் திருவாடனை தொகுதி எம்எல்ஏவுமான கருணாஸ் அவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பதையும் அதனை அடுத்து அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் கருணாசை அடுத்து நடித்த கருணாஸ் ஜோடியாக நடித்த நடிகை ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கருணாஸ் ஹீரோவாக நடித்த படங்களில் ஒன்று ’அம்பாசமுத்திரம் அம்பானி’ இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் நடிகை நவ்நீத் கவூர்
இவருக்கும் இவரது குடும்பத்தை சேர்ந்த 10 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் நடிகை மட்டுமின்றி அரசியல்வாதி என்பதும் தற்போது அவர் அமராவதி தொகுதி எம்பியாக இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
நவ்னித் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களது உடல்நிலை தேறி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே தமிழ் நடிகை நிக்கி கல்ராணிக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே
