அடடா… கருணாஸுக்கு இப்படி ஒரு ஆசையா…? இது கூட நல்லாயிருக்கே…

கருணாஸ் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குருவிக்கரம்பை கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். தனது 12 வயது முதலே நாட்டுப்புற பாடகராக பணியாற்றியவர். அது கூடவே நடன கலைஞராகவும் இருந்தார். சின்னத்திரையில் ‘நையாண்டி தர்பார்’ என்ற நிகச்சியில் கலந்துக் கொண்டு நாட்டுபுற பாடல்களை பாடியும் நகைச்சுவையும் செய்து வந்தார்.

பின்னர் இவரது திறமையின் வாயிலாக சினிமா வாய்ப்பு கிடைத்தது. 2001 ஆம் ஆண்டு சூர்யா நடித்த ‘நந்தா’ திரைப்படம் மூலம் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். காமெடியனாக நல்ல வரவேற்பு கிடைக்கவே அதையே தொடர்ந்தார் கருணாஸ்.

‘பாபா’, ‘பிதாமகன்’, ‘வசூல் ராஜா MBBS’, ‘பொல்லாதவன்’, ‘வில்லன்’, ‘இயற்கை’, ‘குத்து’, ‘தேவதையை கண்டேன்’, ‘யாரடி நீ மோகினி’, ‘சிலம்பாட்டம்’, ‘தில்லுக்கு துட்டு’ போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்திலும் துணை கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானார் கருணாஸ்.

இது தவிர, நகைச்சுவை திரைப்படமான ‘திண்டுக்கல் சாரதி’, ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘சந்தமாமா’, ‘ரகலைபுரம்’, ‘லொடுக்கு பாண்டி’ போன்ற திரைப்படங்களில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். நடித்துக்கொண்டே அரசியலிலும் இறங்கி பணியாற்றி வருகிறார் கருணாஸ்.

தற்போது தனது கிராமத்தில் நாட்டு மாடுகளான காளை, பசு மாடுகள் மற்றும் நாட்டு நாய்களை வளர்த்து வருகிறார் கருணாஸ். இதைப் பற்றி பேசுகையில், நான் நாட்டு நாய்களை தேடி வாங்கி வளர்த்து வருகிறேன். ராஜபாளையம் நாய்கள், ராஜராஜ சோழன் காலத்தில் தமிழர்கள் போருக்கு பயன்படுத்திய அலங்கு நாய்கள் தற்போது அழிந்து கொண்டு வருகிறது. நான் மிகவும் சிரமப்பட்டு அலங்கு நாய்களை வாங்கி வளர்த்து வருகிறேன். அதை இனப்பெருக்கம் செய்து எல்லா மக்களும் அதை வளர்க்க வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று கூறியுள்ளார் கருணாஸ்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews