முதல்வர் அறிவித்த முக்கிய அறிவிப்பு: ஜனவரி 22ஆம் தேதி கருணாநிதி விருது!
தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டது. இதனால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து விருதுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக காவல் துறையினருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் மற்றொரு விருதும் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி கருணாநிதி நிறுத்து ஜனவரி 22ம் தேதியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார். 2010 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது ஜனவரி 22ம் தேதியில் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அண்ணா நூலகத்தில் நடக்கும் விழாவில் எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். சென்னை செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் இவ்வாறு பேசினார்.
ஊடகங்கள், கருத்தரங்கங்கள் வாயிலாக செம்மொழியின் பெருமைகளை மக்கள் அறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் பணிகளை அறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
