Connect with us

விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் வீட்டில் மீண்டும் ரெய்டு!!

karthi

தமிழகம்

விசா முறைகேடு: கார்த்தி சிதம்பரம் வீட்டில் மீண்டும் ரெய்டு!!

சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் கார்த்தி சிதம்பரம் வீட்டில் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் தற்போது டெல்லி சிபிசிஐடி நீதிமன்றத்தில் வழக்கு விடாரணை நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் மீண்டும் சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ போலீசார் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கார்த்தி சிதம்பரத்தின் பீரோவை 6 அதிகாரிகள் சோதனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனையானது சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் நடைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கார்த்தி சிதம்பரம் மற்றும் அவருடைய ஆடிட்டர் பாஸ்கர ராமனிடம் போலீசார் கடந்த மாதம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top