Connect with us

கார்த்தியின் ‘விருமன்’ பாடகியான அதிதி! யுவன் வெளியிட்ட கலக்கல் அப்டேட்!

viruman

பொழுதுபோக்கு

கார்த்தியின் ‘விருமன்’ பாடகியான அதிதி! யுவன் வெளியிட்ட கலக்கல் அப்டேட்!

நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விருமன். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

விருமன் படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வன்னன், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.சமீபத்தில் நடிகர் கார்த்தியின் பிறந்த நாளான்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூ கண்ணாலே என்ற பாடல் வெளியாகி யூடியூபில் சாதனைப்படைத்துள்ளது.  தற்போது இப்படம் சென்சார் பணிகள் முடித்து U/A சான்றிதழ் பெற்றுள்ளது.

viru 2

இன்று இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீடு மதுரையில் நடைபெற உள்ளது. அடுத்து இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘மதுரை வீரன்’ என்ற பாடலின் சிறு வீடியோவை இன்று வெளியிட்டார்கள்.அப்பாடலை யுவனுடன் சேர்ந்து அதிதி ஷங்கர் பாடியுள்ளார். அறிமுகமான முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாக உள்ளார் அதிதி.

viru 1 1

அதிதியைப் பாராட்டி ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ரஜினியின் ஜெயிலர் படத்திற்கான நடிகர்கள் தேர்வு ! வெளியான மாஸ் அப்டேட்!

அடுத்ததாக செப்டம்பர் 30ம்தேதி கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ளது. இதன்பின் தீபாவளியையொட்டி சர்தார் திரைப்படம் வெளியாகிறது. அதிதி அடுத்ததாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்க உள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top