Connect with us

கார்த்தியின் விருமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தெரியுமா ? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

Viruman-6

பொழுதுபோக்கு

கார்த்தியின் விருமன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தெரியுமா ? எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

முன்ணனி நடிகரான கார்த்தியின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் விருமன். சூர்யா – ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் இயக்குனர் சங்கர் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார். இவர் மருத்துவ படிப்பை படித்து விட்டு தற்போழுது ஹீரோயினாக படங்களில் நடித்து வருகிறார்.

viruman

இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், நடிகர் சூரி ஆகியோர் நடித்துள்ளனர். விருமன் படம் வெளியான முதல் நாளிலே ரூ.7.23 கோடி வசூலித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது.

கிராமத்து கதையாக உருவாகியுள்ள இப்படம், திரையுலக வட்டாரங்களில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்துள்ளது. இசை யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு எஸ்.கே.செல்வகுமார்.இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவியும், ஓடிடியில் வெளியிடும் உரிமையை அமேசான் பிரைம் தளமும் பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வாரிசு படப்பிடிப்பில் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட ரஷ்மிகா! கொஞ்சம் ஓவரா இல்ல !

virumaaan

இந்த படம் செப்டம்பர் 11 ஆம் தேதி முதல் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கும் என்று தெரிகிறது. தயாரிப்பாளர்களும் OTT நிறுவனமும் மிக விரைவில் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top