Connect with us

கார்த்தியின் விருமன் பட பாடல்… புதிய சாதனை!

viru 1

பொழுதுபோக்கு

கார்த்தியின் விருமன் பட பாடல்… புதிய சாதனை!

கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விருமன். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

viru 2

அதை தொடர்ந்து செப்டம்பர் 30ம்தேதி கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் வெளியாகவுள்ளது. இதன்பின் தீபாவளியையொட்டி சர்தார் திரைப்படம் வெளியாகிறது.

இந்நிலையில் விருமன் படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வன்னன், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் சமீபத்தில் நடிகர் கார்த்தியின் பிறந்த நாளான்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூ கண்ணாலே என்ற பாடல் வெளிவந்தது. இந்த பாடலை சித்ஸ்ரீராம் ,யுவன் சங்கர் ராஜாவும் பாடி இருக்கிறார்.கருமாத்தூர் மணிமாறன் எழுத்தில் பாடல் அமைந்தது.

viru 1 1

கஞ்சா பூ கண்ணாலே இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த பாடல் யூடியூபில் 20 மில்லியன் பார்வைகளை குறுகிய காலத்தில் கடந்துள்ளது.

‘சூர்யா 41’ படத்தின் டைட்டில் தெரியுமா? அதிரடி அறிவிப்பு!

பாடல் வெளியாகி ஒரு மாதம் ஆனா நிலையில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் பாடல் தற்போது 20 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்திருப்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top