Connect with us

சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ படத்தினால் ரிலீஸ் தேதியை மாற்றிய கார்த்தியின் ‘விருமன்’!

971850 karthi hero

பொழுதுபோக்கு

சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ படத்தினால் ரிலீஸ் தேதியை மாற்றிய கார்த்தியின் ‘விருமன்’!

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாக உள்ள மூன்று ரிலீஸ்களில் ‘விருமன்’ படமும் ஒன்று.கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விருமன். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

viru 1 1 1

விருமன் படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வன்னன், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் சமீபத்தில் நடிகர் கார்த்தியின் பிறந்த நாளான்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூ கண்ணாலே என்ற பாடல் வெளிவந்தது. இந்த பாடலை சித்ஸ்ரீராம் ,யுவன் சங்கர் ராஜாவும் பாடி இருக்கிறார்.கருமாத்தூர் மணிமாறன் எழுத்தில் பாடல் அமைந்தது.

viru 1 1 2

இப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரைக்கு வருகிறது. ஆனால் அதே நாளில் சீயான் விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் ரிலீஸ் அமையயுள்ளது.இயக்குநர் அஜய் ஞானமுத்து எழுத்து,இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோவின் பேனரின் கீழ் எஸ்.எஸ். லலித் குமார் தயாரித்து வரும் இந்த படம் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாகும்.

vikram starring cobra movie uyir urugudhey song released photos pictures stills 1 1

இத்திரைப்படம் வில்லனாக இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடிக்கயுள்ளார்.இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க, ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் விக்ரம் இந்த படத்தில் 7 விதமான கேரக்டரில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.கோப்ரா படத்திற்கான கிராபிக்ஸ் வேலைகள் முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆக்ஸ்ட் 11-ம் தேதி வெளியீட்டில் இருந்து கோப்ரா படம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி தள்ளி போவதாக தகவல் வந்துள்ளது.

ஜல்லிக்கட்டு மாடுபிடிக்க பயிற்சி எடுக்கும் சூர்யா…!!! வைரலாகும் லேட்டஸ் வீடியோ;;

VikramCobra 750 1 1

சியான் விக்ரமின் ‘கோப்ரா’ ஆகஸ்ட் 11 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதால் கார்த்தியின் விருமன் படம் முன்னதாக ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top