நடிகர் கார்த்தி, அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விருமன். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
அதை தொடர்ந்து செப்டம்பர் 30ம்தேதி கார்த்தி நடித்துள்ள பொன்னியி ன் செல்வன் வெளியாகவுள்ளது. இதன்பின் தீபாவளியையொட்டி சர்தார் திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில் விருமன் படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வன்னன், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் நடிகர் கார்த்தியின் பிறந்த நாளான்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூ கண்ணாலே என்ற பாடல் வெளியாகி யூடியூபில் சாதனைப்படைத்துள்ளது. தற்போது இப்படம் சென்சார் பணிகள் முடித்து U/A சான்றிதழ் பெற்றுள்ளது.மேலும் இந்த படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் புது சைடு பிஸ்னஸ் என்ன தெரியுமா? புது முயற்சியா இது?
விருமன் படத்தின் ஆடியோ லான்ச் மதுரையில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த இருப்பதாகவும் அதற்கான விழாவில் படத்தில் நடித்த அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருப்பதகவும் கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா மலேசியாவில் இருந்து திரும்பியது அதற்கான பணிகளை ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.