Connect with us

கார்த்தியின் சர்தார் – பாராளுமன்றத்தில் ஷூட்டிங்கா?

kar

பொழுதுபோக்கு

கார்த்தியின் சர்தார் – பாராளுமன்றத்தில் ஷூட்டிங்கா?

கார்த்தி நடிப்பில் தற்போது விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது. கார்த்தியின் 22வது திரைப்படமாக உருவாகும் படம் தான் சர்தார்.

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிற்காவும்,விருமன் படப்பிடிப்பிற்க்காகவும் தொடர்ந்து நாட்கள் தேவைப்பட்டதால் சர்தார் படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

தற்போழுது சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி, இந்த படப்பிடிப்பில் ராஷி கண்ணாவும் இணைந்துள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு முடிந்ததும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் மைசூரில் நடைபெற உள்ளது என தகவல்கள் வெளியாகின.

maxresdefault 34

இயக்குனர் மித்ரன் இயக்கும் இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ராஜிஷா விஜயனும் நடிக்கின்றனர்‌. மேலும் சிறப்பாக பிரபல நடிகை லைலா இப்படம் மூலம் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்கிறார்.

Laila

இப்படம் குறித்த சுவாரசியமான தகவல் வெளியாகி உள்ளது. சர்தார் படத்தின் முக்கியமான காட்சி ஒன்று எடுப்பதற்காக படக்குழு ரூ.4 கோடி செலவழித்து அசர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ளது,அங்கு உள்ள பாராளுமன்றத்தில் முக்கியமான காட்சி ஒன்றை படமாக்கியது.

லைகா நிறுவனம் வெளியிட்ட சந்திரமுகி படத்தில் அப்டேட்!!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top