அடி தூள்!!! செஸ் ஒலிம்பியாட் ஓபன் சி பிரிவில் கார்த்திகேயன் முரளி வெற்றி!!!

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் சி பிரிவில் தமிழக வீரர் கார்த்திகேயன்  முரளி தெற்கு சூடான் வீரர் அஜேக்கை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

சென்னை மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவிற்கு அடுத்தடுத்து வெற்றிகள் கிடைத்து வருகிறது. அந்த வகையில் முதல் சுற்றில் 6 பேர் தங்களது வெற்றியை பதிவு செய்து உள்ளனர்.

அந்த வகையில் இந்தியாவில் மகளிர் அணி சார்பில் களமிறங்கிய ஈஷா கர்வாடே, பிரத்யூஷா முதல் சுற்றில் சி பிரிவில் பங்கேற்று தங்களுடைய வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

அதே போல் ஓபன் சி பிரிவில் விளையாடிய தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி தெற்கு சூடான் வீரர் அஜேக்கை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார்.

மேலும், மற்றோரு வீரர் குப்தா மற்றும் முதல் வெற்றியை பதிவு செய்த குகேஷ் என மொத்தம் 6 இந்தியர்கள் தங்களது வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment