ஆளப்போறான் தமிழன்; ஒலிம்பியாட்டில் கார்த்திகேயன் முரளி இரண்டாவது வெற்றி!!

தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய வீரர்களின் ஆதிக்கமே அதிக அளவு காணப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழக வீரர்களின் வெற்றியானது இன்றைய தினம் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே வருகிறது.

இந்தியாவின்  செஸ் கிராண்ட் மாஸ்டர் என்று அழைக்கப்படுகின்ற பிரக்ஞானந்தா இன்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். மேலும் அவருடன் சேர்த்து அதிபன் பாஸ்கரன் தனது முதல் வெற்றியினை பதிவு செய்தனர்.

இவர்கள் இருவரும் தனது 41 வது நகர்வுகளின் போது வெற்றி பெற்றனர். இந்த நிலையில் மற்றுமொரு தமிழக வீரர் இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றதாக தகவல் கிடைத்தது.

ஒலிம்பியாட் போட்டியில் இந்திய சி அணியில் இடம் பெற்றுள்ள கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றுள்ளார் .

கார்த்திகேயன் முரளி  30 வது நகர்வுகளின் போது வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் யூரியோ கெப்போ விடலை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார் கார்த்திகேயன் முரளி. இதனால் இவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.