கார்த்திகை மாதம் எதிரொலி: காசிமேட்டில் மீன்களின் விலை குறைவு!!

வாரவிடுமுறை நாட்களில் காசிமேடு மீன் சந்தையில் அசைவ பிரியர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் அதிகளவில் குவிவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அதே சமயம் கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால் பக்தர்கள் அனைவரும் மாலை அணிவித்து விரதம் இருப்பது வழக்கம்.

பிரபல நகைக்கடையில் கொள்ளை: மேலும் 2 பேர் கைது!!

இதன் காரணமாக காசிமேடு மீன் சந்தையில் பொதுமக்களின் வரத்தானது குறைந்து காணப்படுகிறது. மீன்களின் வரத்தானது அதிகமாக காணப்படுவதால் மீன்களின் விலை சற்று குறைந்து காணப்படுகிறது.

அதன் படி, கடந்த வாரம் 2 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்ட வஞ்சிரம் மீன் தற்போது ரூ.800 ஆக விற்பனையாகிறது. அதே போல் வவ்வால் ரூ.500 கொடுவா ரூ.400, சங்கரா ரூ.400க்கு விற்பனையாகிறது.

குழந்தை பிறந்ததும் விபரீத முடிவு!! இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!!

இதனை தொடர்ந்து கடம்பா ரூ.300, நண்டு ரூ.400, இறால் ரூ.300 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும், வரும் காலங்களில் மீன்களின் விலை குறைந்து காணப்படும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.