Connect with us

என்ன பண்ணியிருகிங்க எஸ்.ஜே.சூர்யா… ஷாக்கான கார்த்திக் சுப்புராஜ்!

Entertainment

என்ன பண்ணியிருகிங்க எஸ்.ஜே.சூர்யா… ஷாக்கான கார்த்திக் சுப்புராஜ்!

4d42320cba17d9e6d6220a0d7f72efbe

செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட நாட்களாகவே படம் எதுவும் வெளியாகவில்லை என அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகம் மற்றும் நானே வருவேன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி வரும் செல்வராகவன், 

கீர்த்தி சுரேஷூடன் இணைந்து சாணி காயிதம் திரைப்படத்தில் அறிமுக நடிகராக நடித்துவருகிறார். இந்த நிலையில் தான் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தின் டீசரும் அதனைத் தொடர்ந்து ஒரு ஸ்னீக் பீக்கும் வெளியானது.

அந்த சிறப்புக் காட்சியில், ஒரு வித்தியாசமான மனநிலை கொண்டே கிரேஸி கொலைகாரரான எஸ்.ஜே.சூர்யா, தனக்கு முன்னால் பயத்தில் அனத்திக் கொண்டிருக்கும் ஒருவனிடம்  “டேய்.. சும்மா இர்ரா.. டேய் சும்மா இர்ரா” என சொல்லிப்பார்த்துவிட்டு இறுதியில் அடித்தே கொன்றுவிடுகிறார்.

இந்த மிரட்டலான ஸ்னீக் பீக் வைரலானதை அடுத்து பலரும் பல விதமான கமெண்டுகளை கொடுத்து வரும் நிலையில், “செம்ம எஸ்.ஜே.சூர்யா சார்.. நீங்க சும்மாவே இருக்க மாட்டீங்க… செல்வராகவன் சார் இந்த மேஜிக்கை ஸ்கிரீனில் பார்ப்பதற்காக  காத்திருக்க முடியல..” என்று இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பதிவிட்டுள்ளார்.

ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் வரும் மார்ச் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

More in Entertainment

To Top