கார்த்திக் சுப்புராஜ் பீட்சா படத்திற்கு இவ்வளவு பட்ஜெட் சொன்னார்… ஆனால் படம் வெளியான பின்பு கலெக்ஷன் இவ்வளவு ஆச்சு… தயாரிப்பாளர் CV குமார் பேச்சு…

கார்த்திக் சுப்புராஜ் தமிழ் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். கல்லூரியில் படிக்கும் போதே படம் இயக்குவதில் அதிக ஆர்வம் கொண்டு குறும்படங்களை இயக்கியவர்.

2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்த ‘பீட்சா’ திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இத்திரைப்படம் நல்ல விமர்சங்களைப் பெற்று வணீக ரீதியாகவும் வெற்றிப் பெற்றது. மேலும் இப்படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனருக்கான SIIMA விருதை வென்றார்.

தொடர்ந்து ஜிகர்தண்டா(2014), இறைவி (2016), மேயாத மான் (2017), பேட்ட (2019), புத்தம் புது காலை (2020), ஜகமே தந்திரம் (2021), மகான் (2022), ஜிகர்தண்டா டபுலெக்ஸ் (2023) ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது ‘ஆட்டத்தையே மாற்றியமைப்பவன்’ மற்றும் சூர்யா 44 ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

கார்த்திக் சுப்புராஜின் முதல் படமான பீட்சா திகில் கலந்த திரைப்படம் ஆகும். பீட்சா டெலிவரி செய்யப் போகும்போது ஒரு வீட்டில் மாட்டிக்கொண்டு வெளிவருவதை திகிலுடன் காட்டியிருப்பார் கார்த்திக் சுப்புராஜ். இப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் பீட்சா திரைப்படத்தின் தயாரிப்பாளரான CV குமார் பீட்சா திரைப்படத்தை பற்றி சுவாரசியமான தகவலைப் பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், பீட்சா திரைப்படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் என்னிடம் 70 இலட்சம் பட்ஜெட் சொல்லியிருந்தார். ஆனால் 50 இலட்சத்தில் படத்தை முடித்து விட்டார். படம் வெளியான பின்பு கிட்டத்தட்ட 6 கோடி வசூலித்தது, எனக்கு நல்ல லாபம் கிடைத்தது என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் CV குமார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...