பாஜக யூ-டியூபர் கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் !!

நேற்றைய தினத்தில் பாஜக ஆதரவாளர் மற்றும் யூடியூப் சேனல் மூலம் திமுகவிற்கு எதிராக குரல் கொடுத்து வரும் கார்த்திக் கோபிநாத் போலீசார் சுமார் 35 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறி கைது செய்தனர்.

குறிப்பாக பெரம்பலூர் சித்திரை திருவிழாவின் போது அடையாளம் தெரியாத நபர்களால் சிலைகள் உடைக்கப்பட்டதாக கூறி அறநிலைத்துறையின் முறையான அனுமதியின்றி பொதுமக்களிடம் வசூல் செய்தார் என்ற வழக்கின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் விரைவான விசாரணை நடத்த ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர். அந்த அடிப்படையில் இவர் பணம் வசூலித்த 34 லட்சம் ரூபாயும் எந்த வங்கி கணக்கில் வசூல் செய்துள்ளார் என்பது குறித்தும் கோபிநாத்தின் தனிப்பட்ட இரண்டு வங்கி கணக்குகளை முடக்கி ஆய்வு செய்வதற்காக போலீசார் முடிவுசெய்துள்ளனர்.

இந்நிலையில் இவர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் போலீஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளன. இவர் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணை என்பது நாளை நடைபெறும் என்றும் இன்றைய தினத்தில் பாஜக யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார்  திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment