கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி மல்லிகை பூக்களின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.3,000 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் புகழ்பெற்ற பூ சந்தையில் கன்னியாகுமரியில் உள்ள தோவாளை மலர் சந்தை மிகவும் புகழ்பெற்றது ஆகும். இந்த சந்தையில் ஓசூர், குமாரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் பூக்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.
பரந்தூர் விமான நிலையம்: சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது!
அதேசமயம் தமிழகம் மட்டுமல்லாது கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் மலர் சந்தையில் இருந்து பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் கார்த்திகை தீபத் திருநாளை ஒட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவதால் பூக்களின் விலையானது கிடுகிடுவென அதிகரித்து காணப்படுகிறது.
அதன் ஒரு மல்லிப்பூ கிலோ ஒன்றிற்கு ரூ.3000 ஆயிரம் ரூபாய்க்கும், பிச்சு பூ ரூ.750 முதல் ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் மரிகொழுந்து,சம்மங்கி, வெள்ளை சாமந்தி, மஞ்சள் சாமந்தி, செவ்வந்தி, தாமரை, ரோஜா உள்ளிட்ட பூக்களின் விலையும் பரவலாக அதிகரித்துள்ளது.
ஊட்டியில் திடீர் மண்சரிவு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!
மேலும், வரும் காலங்களில் பூக்களின் விலையானது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.