கார்த்திக் அரசியலுக்கு வந்ததும் கவுண்டமணி ஒரே வார்த்தையில் கேட்ட கேள்வி.. நக்கல் புடிச்ச ஆளு தான்..

நடிகர்களாகவோ, நடிகைகளாகவோ சினிமா துறையில் காலடி எடுத்து பிரபலமாக இருப்பவர்கள் பலருக்கும் அதனை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வது என்பது சற்று கடினமான விஷயம் என்பது அவர்களுக்கே தெரிந்தது தான். ஒரு சிலர் 30, 40 ஆண்டுகளாக பல திரைப்படங்களில் நடித்து வந்தாலும் இன்னொரு பக்கம் ஒரு சில படங்கள் ஹிட்டான பின்னாலும் கூட திடீரென சினிமா துறையில் இருந்து காணாமலும் போய் விடுவார்கள்.

இதனால் சினிமா என்றைக்கும் நிலைத்து நிற்காது என்பதை தெரிந்து வைத்துக் கொண்டுள்ள பலரும், ஏதாவது தங்களுக்கு தெரிந்த பிசினஸ் எதிலாவது முதலீடு செய்யவும் நினைப்பார்கள். இன்னொரு பக்கம் மற்ற நடிகர்கள், நடிகைகள் சிலரும் அரசியலில் எப்படியாவது சினிமாவில் கிடைத்த பிரபலத்தை கொண்டு ஆதாயம் தேடி விட வேண்டும் என்றும் பல முயற்சிகளை செய்வார்கள்.

இதில் ஒரு பக்கம் எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் உள்ளிட்ட பல வெற்றி பெற்றவர்களும் இருக்கும் நிலையில், சிவாஜி கணேசன், டி.ஆர், நவரச நாயகன் கார்த்திக் என பலரும் அரசியல் கட்சி தொடங்கி அதில் எந்த விதத்திலும் முன்னேற்றம் காணவில்லை என்பது தான் உண்மை. இதில் நவரச நாயகன் நடிகர் கார்த்திக், அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து இருந்தார்.

ஆனால் தமிழக அரசியலில் அவரது கட்சி எந்த விதத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில், தான் கட்சி ஆரம்பித்த சமயத்தில் இதற்கு நடிகர் கவுண்டமணி ஒரே வார்த்தையில் கேட்ட கேள்வி தொடர்பான செய்தி தற்போது அதிகம் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

நடிகர் கார்த்திக் மற்றும் கவுண்டமணி ஆகிய இருவரும் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளனர். அவர்களின் காமெடி காட்சிகளை இன்றைக்கும் ரசித்து பார்க்கும் ரசிகர்களும் ஏராளம் பேர் உள்ளனர். அப்படி இருக்கையில் நடிகர் கார்த்திக் கட்சியை ஆரம்பித்த சமயத்தில், கவுண்டமணியை சந்தித்ததாகவும் தெரிகிறது.

அப்போது நடந்த சம்பவத்தை பற்றி பேசிய கார்த்திக், “நான் அரசியல் கட்சி ஆரம்பிச்ச நேரத்துல அண்ணன் கவுண்டமணிகிட்ட ஒரே ஒரு ரியாக்சன் தான் வந்தது. ‘எதுக்கு’ன்னு அண்ணா ஒரே வார்த்தையை ஏளனமா கேட்டுட்டு ஒரு ரியாக்சன் மட்டும் என்னை பார்த்து கொடுத்தாரு. நான் எந்த அளவுக்கு அவர் மேலும் மரியாதை வச்சி இருக்கேனோ, அதைவிட அவருக்கு என் மேல் ஒரு தம்பியா நல்ல பிரியம் அதிகம். எனக்கு அரசியல் செட் ஆகாதுன்னு அவருக்கு அப்பவே தெரிஞ்சதுனால தான் அந்த ரியாக்ஷன் கொடுத்திருக்கார்” என கார்த்திக் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...