கார்த்திகை சோமவாரத்தில் களைகட்டும் பட்டுக்கோட்டை கோவில்

பட்டுக்கோட்டையில் இருந்து வேதாரண்யம், நாகப்பட்டினம், வேளாங்கன்னி செல்லும் முக்கிய பாதையில் பரக்கலக்கோட்டை என்ற ஊரில் பொது ஆவுடையார் கோவில் உள்ளது.

2726ad99f30b562529926289e7f990ec

இக்கோவிலின் விசேஷம் சிவபெருமான் இரண்டு முனிவர்களுக்கு இடையே ஏற்பட்ட வான் கோபர் மகாகோபர் என்ற முனிவர்களுக்கு இல்லறம் சிறந்ததா துறவறம் சிறந்ததா என ஏற்பட்ட சந்தேகத்தை இங்குள்ள ஆலமரத்தில் உட்கார்ந்து சிவபெருமான் குருவடிவில் உட்கார்ந்து தீர்த்து வைத்தாராம் .

இந்த சம்பவம் திங்கட்கிழமையில் நடைபெற்றதாக கணக்கு வைத்து பல வருடங்களாக திங்கட்கிழமை இரவு மட்டுமே இந்த கோவில் திறக்கப்படுகிறது. திங்கட்கிழமை இரவு மட்டுமே திறக்கப்படும் இந்த கோவில் இரவு நடுநிசி 12 மணி பூஜைக்கு பின்னர் நடை சாற்றப்படும் மீண்டும் மறுவாரம் தான் திறக்கப்படும் சுற்றுவட்டார மக்கள் எல்லாம் இந்த கோவிலுக்கு வருகை புரிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கட்கிழமை எல்லா சிவன் கோவிலிலும் விசேஷம் சோமவார பூஜைகள் நடைபெறும். அதிலும் கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டு அதிக சிறப்பு பூஜைகள் நடைபெறும் கூடுதலாக சில மணி நேரம் நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும் மற்ற நாட்களில் வரும் கூட்டத்தை விட கார்த்திகை மாத சோமவாரத்துக்கு இங்கு அதிக பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு இந்த கோவில் பூஜையில் கலந்து கொண்டால் எண்ணியது ஈடேறும் என்பது நம்பிக்கை.

இங்கு மூலஸ்தானத்தில் உள்ள ஆலமரமே சிவனாக காட்சி அளிக்கிறார். வெள்ளால மரமே இங்கு மூலவராக உள்ளது குறிப்பிடத்தக்கது. வருடம் ஒரு முறை தை பொங்கலன்று மட்டும்தான் இக்கோவில் முழுவதும் திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.