Entertainment
இயற்கை விவசாயத்தை போற்றும் கார்த்தி
நடிகர் சிவக்குமார் கோவை மாவட்டத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது மகன்கள் சூர்யா, கார்த்தி இருவருமே நற்காரியங்களை செய்து வருகின்றனர்.

அகரம் பவுண்டேஷன் மூலம் பல குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார் சூர்யா.
இந்நிலையில் உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பை கடந்த வருடம் துவங்கிய கார்த்தி உழவர்கள் பலரின் வாழ்வுக்கு வழி வகுப்பதோடு உதவிகளும் செய்து பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழுடன் சேர்ந்து சிறப்பு விருதுகளும் வழங்கி கவுரவித்துள்ளார்.
அனைவருக்கும் தனது இனிய பொங்கல் வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.
