விருமன் பட இசை வெளியீட்டு விழாவில் பிரியாமணியை தேடும் கார்த்தி! காரணம் தெரியுமா?

நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக முத்தையா இயக்கத்தில் இணைந்து நடித்துள்ள படம் விருமன் , இந்த படத்தில் முன்னணி இயக்குனர் இரண்டாம் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

கார்த்தியின் நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் படத்தை போல இந்த படமும் கிராமத்து பின்னணியில் கதைக்களமாக கொண்டு அமைந்துள்ளது ,விருமன் படத்தில் பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வன்னன், சூரி, கருணாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

viru 2

சமீபத்தில் நடிகர் கார்த்தியின் பிறந்த நாளான்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கஞ்சா பூ கண்ணாலே என்ற பாடல் வெளியாகி யூடியூபில் சாதனைப்படைத்துள்ளது. தற்போது இப்படம் சென்சார் பணிகள் முடித்து U/A சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ‘மதுரை வீரன்’ என்ற பாடலின் சிறு வீடியோவை இன்று வெளியானது. இன்று இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீடு மதுரையில் நடைபெற உள்ளது. படம் முழுக்க மதுரை ,தேனீ சுற்றி படமாக்கப்பட்டதால் ,இசை வெளியீடும் மதுரையில் நடத்தப்படுகிறது.

images 7

இந்த இசை வெளியீட்டில் பேசிய கார்த்தி நடிகை அதிதியை பார்ப்பதற்கு பிரியாமணி போல இருப்பதாக கூறியுள்ளார், கார்த்தி முதலில் ஹீரோவாக அறிமுகமாகிய படம் பருத்திவீரன் . 2007ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியாமணி நடித்திருப்பார், இந்த படமும் கிராமத்து கதையை மையமாக கொண்டுதான் அமைந்திருக்கும்.

ரஜினியின் ஜெயிலர் படத்திற்கான நடிகர்கள் தேர்வு ! வெளியான மாஸ் அப்டேட்!

பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது, அதே போல விருமன் படத்திலும் அதிதி தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.மேலும் முதல் படத்திலே அதிதி பாடியுள்ளார்.மதுரை வீரன் பாடலை யுவனுடன் சேர்ந்து அதிதி ஷங்கர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment