Connect with us

த்ரிஷாவின் location கேட்டு அடம்பிடிக்கும் கார்த்தி! புதுசா இருக்கே இந்த அப்டேட்..

trisha

பொழுதுபோக்கு

த்ரிஷாவின் location கேட்டு அடம்பிடிக்கும் கார்த்தி! புதுசா இருக்கே இந்த அப்டேட்..

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் புரமோஷன் வேலைகளை பட குழுவினர் தற்போது தொடங்கியுள்ளனர். அந்த வகையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தோற்றத்தை வெளியிட்டு வருகின்றனர்.

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், பழுவூர் ராணி நந்தினி ஆகிய கதாபாத்திரங்களின் தோற்றங்கள் வெளியான நிலையில் தற்போது குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் த்ரிஷாவின் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.

 

Ponniyin selvan

இந்த திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக என பட குழுவினர் அறிவித்துள்ளனர் . கல்கியின் புகழ்பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவித்தான் இந்தப் படம் இயக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மாலை பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசரை வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

ஐந்து மொழிகளில் ஐந்து பிரபலங்கள் தங்களின் சமூக வலைதளத்தில் வெளியிட உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதக்கவும் கூறப்படுகிறது. அதேபோல் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ட்ரேட் சென்டர் அரங்கில் படத்தின் டீசரை செய்தியாளர்களுக்கு திரையிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ponnin 2

இந்நிலையில் த்ரிஷாவின் கேரக்டர் போஸ்டரை ட்விட்டரில் பகிர்ந்துள்ள கார்த்தி, இளவரசி… உங்க லொகேஷனை அனுப்புங்க… உங்கள் அண்ணனின் ஓலையை உங்களுக்கு அளிக்க வேண்டும் என்று கிண்டலாக கூறியுள்ளார்.

திரிஷாவை கலாய்ப்பதாக தெரிந்தாலும் அதேநேரம் பொன்னியின் செல்வன் படத்தையும் புரமோட் செய்து கார்த்தி வெளியிட்டுள்ள பதிவு ட்விட்டரில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் இந்த படத்தை லைக்கா மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

விஜய் சேதுபதியின் வருகையால் ஃபஹத் பாசில் வெளியேற்றமா? காரணம் தெரியுமா?

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top