Connect with us

யூடியூபர் கார்த்தி கோபிநாத் வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

karthi 1

தமிழகம்

யூடியூபர் கார்த்தி கோபிநாத் வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

பெரம்பலூர் மாவட்டம் திருவொற்றியூரில் உள்ள மதுரை காளியம்மன் கோயில் திருப்பணிகளுக்காக பணம் வசூலித்து இதனை கோவில் பணிகளுக்கு பயன்படுத்தாமல் மற்ற இதர செலவுகளுக்கு பயன்படுத்தியதாக பாஜக ஆதரவாளர், யூடியூபரான கார்த்தி கோபிநாத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் மே 29-ம் தேதி கார்த்தி கோபிநாத் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தார்.

கடந்த முறை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது கார்த்தி கோபிநாத்தின் வங்கிக் கணக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான அமர்வு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கார்த்திக் தரப்பில் வங்கிக் கணக்கின் விவரம் வங்கியிடம் கேட்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் வழங்கப்படாமல் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து போதிய அவகாசம் அளித்தும் காவல்துறை உரிய தாக்கல் செய்யாததால் கார்த்தி கோபிநாத்திற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top