Connect with us

விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!!

Chidambaram

செய்திகள்

விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!!

விசா முறைக்கேட்டு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீன நபர்களிடம் விசா முறைக்கேட்டில் ரூ.50 மோசடி செய்யப்பட்டதாக கூறி கார்த்திக் சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் கடந்த மாதம் ஜூன் 18-ஆம் தேதி கைதுசெய்யப்பட்ட நிலையில் கார்த்திக் சிதம்பரம் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

அதோடு சென்னையில் இயங்கிய மெல்ட்ராக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம் கார்த்தி சிதம்பரத்திற்கு 1.5 கோடி ரூபாய் பணபரிமாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தப்பிக்க  கார்த்திக் சிதம்பரம் முன்ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இதனை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனிடையே மேல்முறையீடு செய்ய 7 நாட்கள் அவகாசம் அளிக்க கார்த்திக் சிதம்பரத்தின் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்திருந்தார்.

கார்த்திக் சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமன் மற்றும் விகாஸ் மகாரியாவின் முன்ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்தது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம். மேலும், கார்த்திக் சிதம்பரத்திற்கு அவகாசம் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை வழக்கறிஞர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top