பாஜக கமலாலயம் அலுவலகத்திற்கு பெட்ரோல் குண்டு வீச்சு: ஒருவர் கைது

சென்னை தி நகர் பகுதியில் அமைந்து இருக்கும் தமிழக பாஜக கமலாலயம் அலுவலகத்தில் நேற்று இரவு மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீச்சு மர்ம நபர்கள் தப்பி ஓட்டயோடியுள்ளார்.

இதையடுத்து தி நகர் வெஸ்ட் மம்பலம், தி நகர் மாவட்ட துணை ஆணையர் ஹரிகரன் பிரசாத் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணை அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி கேமராவில்
ஆய்வு மேற்கொண்டதில் மர்ம நபரான ஒருவர் சிசிடிவி காட்சி களில் சிக்கியுள்ளது தெரியவந்தது.

இதில் தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக  காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment