பலத்த போராட்டம்-திக் திக் நிமிடங்கள்; கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா ராஜினாமா..!!
கர்நாடகாவில் அடுத்தடுத்து பல்வேறு விதமான மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு வருகிறது. அதன்படி சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பதவி ராஜினாமா செய்தார். அதன்பின்னர் பசவராஜ் பொம்மை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் தற்போது கடந்த சில நாட்களாக கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்காக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்தது. இதனால் அவர் பதவி விலக வேண்டும் என்று பலரும் கோஷமிட்டு வந்தனர்.
இந்த நிலையில் கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியது. அதன்படி கர்நாடக ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் ஈஸ்வரப்பா.
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இடம் ராஜினாமா கடிதத்தை அளித்தார் கர்நாடக ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா. பெலகாவியை சேர்ந்த அரசு சிவில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டில் உயிரிழந்த விவகாரத்தில் ராஜினாமா செய்துள்ளார்.
