கர்நாடக பால்வளத்துறை புனித்ராஜ்குமாருக்கு செய்த சிறப்பு

மறைந்த கன்னட நடிகராக இருந்த ராஜ்குமாரின் இளைய மகன் புனித் ராஜ்குமார். ராஜ்குமார் 70வயதை நெருங்கும் வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடனே வாழ்ந்து மறைந்தார்.

கன்னடத்தில் ராஜ்குமாருக்கு ரசிகர்கள் அதிகம் உண்டு. அவரின் மறைவுக்கு பிறகு அவரின் மகன்கள் புனித் ராஜ்குமார், ஷிவ்ராஜ்குமார் இருவரும் புகழ்பெற்றனர்

இருவரும் பிஸியான நடிகர்களாக நடித்துக்கொண்டிருந்தனர். கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களாகவும் இருந்தனர்.

நம்மூர் அஜீத் விஜய் போல புனித் ராஜ்குமாருக்கு அதிக ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் புனித் ராஜ்குமார் கடந்த 2021 அக்டோபர் மாதம் திடீர் மாரடைப்பால் இறந்தார்.

அவர் நிறைய அனாதை இல்லங்கள், கோசாலைகளை இலவசமாக நடத்தி வந்ததாக கூறப்பட்டது. அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கர்நாடக அரசு பால்வளத்துறை அவருடைய புகைப்படத்தை பால் பாக்கெட்டுகளில் பிரிண்ட் செய்து வெளியிட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment