ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர், தினம் அரை லிட்டர் பால்; 10 கிலோ தானியம் – இலவசங்களை அள்ளி தெளித்த பாஜக!

கர்நாடகா தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 இலவச கியாஸ் சிலிண்டர்கள், தினமும் அரை லிட்டர் இலவச பால், மாதந்தோறும் இலவச உணவு தானியம் ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வார்டிலும் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்றும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 10 கிலோ
(5 கிலோ அரிசி + 5 கிலோ தினை) இலவசம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி, உகாதி மற்றும் விநாயகர் பண்டிகைக்கு 3 சிலிண்டர்கள் இலவசம் என்றும், காசி மற்றும் கேதார்நாத் புனித யாத்திரைக்காக ஏழை மக்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கர்நாடகா முழுவதும் உள்ள முக்கிய கோவில்களை பராமரிப்புக்காக 1000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.