மேகதாது அணை விவகாரம்: கர்நாடகாவின் அறிவிப்பை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்!!
மேகதாது அணைக்காக ரூ. 1000 நிதி ஒதுக்கிய கர்நாடகாவின் அறிவிப்பை சட்டவிரோதம் என அறிவிக்குமாறு காவேரி மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய விவசாய ஒருங்கிணைப்பாளர் டி. ஆர் பாண்டியன் மேகதாது அணைக்கான வரை விதித்துள்ள அறிக்கையை ஆய்வுக்கு எடுக்க காவிரி மேலாண்மை ஆணையம் மறுத்துள்ளது.
இந்நிலையில் தன்னிச்சையாக அரசு லாபத்திற்கு கர்நாடகா அரசு மேகதாது அணைக்காக நிதி ஒதுக்கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.இந்த சட்டவிரோத நடவடிக்கையால் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.
மேகதாதுவில் அணைகட்ட கர்நாடக பட்ஜெட்டில் ரூ. 1000 ஒதுக்கியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக பாமக இளைஞரணி அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி திட்டத்திற்கு அனுமதி அளிக்க முடியாது என ஒன்றிய அரசு கூறியிருந்தாலும் கர்நாடகாவின் தேர்தலை கருத்தில் கொண்டு எந்த நாடகமும் அரங்கேற்ற வாய்ப்பிருப்பதால் தமிழ்நாடு அரசு இதனை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என கூறியுள்ளார்.
