ஹிஜாப் விவகாரம்: தீர்ப்பு வழங்கிய 3 நீதிபதிகளுக்கு கர்நாடக முதலமைச்சர் அதிரடி நடவடிக்கை!!
ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதையடுத்து அவர்களுக்கு ஓய்வு பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் அணிய கர்நாடக மாணவிகள் தொடர்ந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் கல்விக்கூடங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதை தவிர்க்க வேண்டும் என்றது செல்லும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தத் தீர்ப்பினை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதனிடையே தீர்ப்புக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் போராட்டம் நடத்திய போது சிலர் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது குறித்து பெங்களூர் காவல்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மை இந்த விவகாரத்தை அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து கொண்டு வருவதாகவும் கூறினார்.
மேலும், ஹிஜாப் விவகாரத்தில் தீர்பளித்த நீதிபதிகளுக்கு ஓய்வு பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
