மேகதாது அணை விவகாரம்: முட்டிக்கொள்ளும் தமிழகம்-கர்நாடகா! மாறிமாறி தீர்மானம்!!
நேற்றைய தினம் தமிழகத்தில் பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என மாறிமாறி பட்ஜெட் மீது விவாதம் புரிந்தனர். ஆனால் நேற்று ஆளும் கட்சியினர் எதிர்கட்சியினர் ஒன்றாக ஒருமனதாக மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர்.
இந்த நிலையில் தமிழகத்திற்கு எதிராக தற்போது கர்நாடகா தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மேகதாது அணைக்கு எதிராக தமிழகம் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவிற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேகதாது பற்றி வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ள நிலையில் மாறி மாறி ஒவ்வொரு மாநில அரசும் தீர்மானத்தை நிறைவேற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாகவும் அறிவித்திருந்தது. அதற்கு தமிழகத்தில் உள்ள பலரும் கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
