Connect with us

தமிழகத்தை காப்பி அடித்த கர்நாடகா? பொது இடங்களில் முககவசம் கட்டாயம் உத்தரவு!!

facemask

செய்திகள்

தமிழகத்தை காப்பி அடித்த கர்நாடகா? பொது இடங்களில் முககவசம் கட்டாயம் உத்தரவு!!

தமிழகத்தை காப்பி அடித்த கர்நாடகா? பொது இடங்களில் முககவசம் கட்டாயம் உத்தரவு!!

நம் தமிழகத்தில் கடந்த ஓரிரு நாட்களாக கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இன்று காலை தமிழக முதலமைச்சரின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

அதன் பின்பு பல்வேறு விதமான அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதுவும் குறிப்பாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் மீறினால் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவு மீண்டும் அமல் படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தை போன்று மற்றும் ஒரு மாநிலம் இத்தகைய உத்தரவை மீண்டும் அமல் படுத்தி உள்ளதாக தெரிகிறது. அதன்படி கர்நாடகா மாநிலத்தில் பொது இடங்களில் பொதுமக்கள் சென்றால் கட்டாயம் அணிய வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பொது இடங்கள் மட்டுமின்றி பொது போக்குவரத்து மற்றும் பணியிடங்களில் கூட கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவிலும் திடீரென்று கொரோனாவின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் இத்தகைய உத்தரவினை மீண்டும் அமல் படுத்தி உள்ளதாக தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top