காரைக்குடி – கன்னியாகுமரி இடையே ரயில் பாதை: மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சகம் தகவல்!!

காரைக்குடி – கன்னியாகுமரி இடையே ரயில் பாதை அமைக்கும் திட்டம் நிதி ரீதியாக சாத்தியமற்றது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார்.

இதன்படி காரைக்குடி முதல் கன்னியாகுமரி வரையிலான ரயில் பாதை ராமநாதபுரம், தூத்துகுடி கடலோர திட்டத்திற்கு கடந்த 2011-ல் இரண்டு பகுதிகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.

ஆனால் நிதி ரீதியாக இந்த திட்டம் சாத்தியமற்றது என்பதால் அதை மத்திய இரயில்வே  அமைச்சகம் முன் எடுத்து செல்ல முடியவில்லை என பதிலளித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment