Connect with us

கரை திரும்பாத காரைக்கால் மீனவர்கள்; ஏழு பேரை காணவில்லை என புகார்!!

மீனவர்

தமிழகம்

கரை திரும்பாத காரைக்கால் மீனவர்கள்; ஏழு பேரை காணவில்லை என புகார்!!

கடந்த சில நாட்களாக நம் தமிழகத்தில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மற்றும் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்தது.

இதனால் மீனவர்களுக்கு அவ்வப்போது வானிலை ஆய்வு மையம் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடும். இந்த நிலையில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் காணவில்லை என்ற தகவல் பெறும் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

அதன்படி கோடியாக்கரை அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற காரைக்கால் மீனவர்கள் ஏழு பேர் இன்னும் கரை திரும்பவில்லை. கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான படகில் மீனவர்கள் ஏழு பேர் கடந்த பதினெட்டாம் தேதியே மீன்பிடிக்க சென்றனர் என்று அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் கூறுகின்றனர்.

கோடியாக்கரை அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மீனவர்கள் காணவில்லை என காரைக்கால் மேடு மீனவ பஞ்சாயத்தார் கடலோர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காணாமல் போன மீனவர்களை கடலோர காவல் படையினர் தேடிக் கொண்டு வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top