Connect with us

ரேசனில் கபசுர குடிநீர்: சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல்!

Tamil Nadu

ரேசனில் கபசுர குடிநீர்: சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல்!

93bb1b82136305df7e5fe66e3c6a92cc

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கபசுர குடிநீர் பாக்கெட்டுகள் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சமீபத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு ரேசனில் ரூபாய் 4000 நிவாரண தொகை வழங்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா நோய் பாதிப்பை தடுக்கும் வகையில் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் பாக்கெட்டுகள் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று திருநெல்வேலியைச் சேர்ந்த அய்யா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

மத்திய ஆயுஷ் அமைச்சகம் கபசுர குடிநீர் விநியோகத்தை விரைவுபடுத்த மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது என்று, கொரோனாவால் பாதிப்பை கட்டுப்படுத்த மாநில முழுவதும் கபசுர குடிநீரை இலவசமாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து தமிழக அரசு பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu

To Top