கனமழை எதிரொலி: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்று கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனை அடுத்து 7 மாவட்டங்களில் உள்ள பகுதிகளிலும் பள்ளிகள் விடுமுறை அளிக்க வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டது.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு பலத்த மழை பெய்ததை அடுத்து நகரின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை அடுத்து வெள்ளம் பாயும் பகுதிகளில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை குறித்த அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment