News
கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் தினமும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பலியாகி வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தினமும் இரண்டு எம்.எல்.ஏக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வரும் செய்திகள் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்
கடந்த சில நாட்களாக கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா அறிகுறி இருந்ததை அடுத்து தற்போது பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
ஏற்கனவே தமிழக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் 32 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு எம்பி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
