அமைச்சர் துரைமுருகனை சந்தித்த கன்னியாகுமரி எம்பி!

83a2d8335293870f05a203cf570677d1

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களை கன்னியாகுமாரி எம்பி விஜய் வசந்த் சந்தித்து கோரிக்கை ஒன்றை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

கன்னியாகுமரி தொகுதிக்கு சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் உடன் இடைத்தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட நடிகர் விஜய் வசந்த், பாஜக பிரமுகர் பொன் ராதாகிருஷ்ணனை தோற்கடித்தார் என்பது தெரிந்ததே

கன்னியாகுமரி தொகுதி மக்கள் தனக்கு கொடுத்த வெற்றியை அடுத்து அவர் தினந்தோறும் தொகுதி மக்களுக்காக சேவை செய்து வருகிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் நேற்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களை கன்னியாகுமரி எம்பி விஜய் வசந்த் சந்தித்துள்ளார். அப்போது அவர் குமரி மாவட்டத்திற்கு தேவையான துறை ரீதியான கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் திரு துரைமுருகன் அவர்களை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அத்துடன் குமரி மாவட்டத்திற்கு தேவையான துறை ரீதியான கோரிக்கைகளையும் அமைச்சரிடம் முன் வைத்தேன்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment