ஈஷாவில் ‘கந்தாரா’ திரைப்படம் சிறப்பு திரையிடல்!

தீபாவளியை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் ‘கந்தாரா’ திரைப்படம் சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது.

இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னடத்தில் ஹிட்டான “கந்தாரா” திரைப்படம் வசூல் சாதனை படைத்து வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை ஈஷா யோகா மையத்தில் இப்படத்தின் சிறப்பு காட்சியை ஹோம்பேல் பிலிம்ஸ் குழுவினர் ஏற்பாடு செய்தனர். ஹோம்பேல் பிலிம்ஸ் குழுவினருக்கும், ரிஷப் ஷெட்டி அவர்களுக்கும் நன்றி” என தெரிவித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஈஷா யோகா மையத்தின் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் கண்டு களித்தனர்.

இதற்கு முன்பு வீர மங்கை ஜான்சி ராணியின் வரலாற்றை பேசும் ‘மணிகர்ணிகா’ திரைப்படம் சிறப்பு காட்சியாக ஈஷாவில் திரையிடப்பட்டது. அப்போது, அப்படத்தின் கதாநாயகியான கங்கனா ரணாவத் அவர்கள் ஈஷா தன்னார்வலர்களுடன் சேர்ந்து படம் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.