100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் காந்தாரா 2!.. பட பூஜை எப்போ தெரியுமா?..

‘காந்தாரா 2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வரும் நவம்பர் 27-ஆம் தேதி நண்பகல் 12.25 மணிக்கு வெளியாகும் என போஸ்டரை பகிர்ந்து படக்குழு அறிவித்துள்ளது.

சென்ற ஆண்டு சிறிய முதலீட்டில் உருவாகி அதிக வசூலை எடுத்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய கன்னட படம் காந்தாரா. 16 கோடியில் தயாரான இப்படம் மிகப் பெரிய வெற்றியடந்ததால் தமிழ், இந்தி, தெலுங்கு, போன்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு 400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார்.

காந்தாரா 2 பட பூஜை அப்டேட்

காந்தாரா 1 படத்திற்கு கிடைத்த வரவேற்பினால் அடுத்து இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாக முன்னதாக தெறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தின் முன்கதையை தான் இரண்டாவது பாகமாக ரிஷப் ஷெட்டி உருவாக்க போவதாகவும் அதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டிருப்பதால் படத்தின் சூட்டிங் தாமதமாகியுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

காந்தாரா 2 அடுத்த ஆண்டு வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட் வொர்க்கை ரிஷப் ஷெட்டி முடித்ததால் வரும் 27ம் தேதி படத்தின் பூஜை நடத்தப்பட்டு சூட்டிங் துவங்கவுள்ளது.

இதுகுறித்து படத்தயாரிப்பு நிறுவனமான ஹம்பாலே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் இது ஒரு வெளிச்சம் அல்ல தரிசனம் என்று குறிப்பிட்டுள்ளது. அதையடுத்து, அன்றே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகவுள்ளதாகவும் , படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் குறித்து அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ரீக்வெல் படமாக

காந்தாரா 2 படமும் காந்தாரா படத்தை போலவே அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

காலம் காலமாக நடந்துவரும் நில உரிமை பிரச்சனயை அடிப்படையாய்க் கொண்டு மிகவும் அற்புதமாக திரைக்கதையாக்கி மக்களிடம் சேர்த்தார் ரிஷப் ஷெட்டி. காந்தாரா படம் மிகப்பெரிய வரவேற்பை சினிமாவில் பெற்றது. இந்நிலையில் தற்போது உருவாகவுள்ள அடுத்த பாகம் ரசிகர்களிடம் எத்தகைய வரவேற்பை ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த படம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிஷப் ஷெட்டியை நேரில் சந்த்தித்து பாராட்டு தெரிவித்திருந்தார், அதே போல் இந்த பாகமும் பாராட்டு பெருமென எதிர்பார்க்கப்படுகிறது.

காந்தாரா சாப்டர் 1 என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருக்கின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.