காஞ்சனா 3’ பட நடிகை தற்கொலை: காதல் தோல்வியா?

591fa5f42f1891031e80c77480edd0c8-1

பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய ’காஞ்சனா 3’ என்ற திரைப்படம் கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் இந்த படத்தில் நடித்த முக்கிய நடிகைகளில் ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

’காஞ்சனா 3 திரை’ படத்தில் ஓவியா, வேதிகா, நிக்கி டம்போலி மற்றும் அலெக்சாண்டரியா ஜாவி ஆகிய நான்கு நடிகைகள் நடித்திருந்தனர் என்பது தெரிந்ததே. இதில் அலெக்சாண்டரியா ஜாவி என்ற நடிகை ரஷ்யாவை சேர்ந்தவர் என்பதும் அவர் இந்த படத்தில் கிளாமராக நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகை அலெக்சாண்டரியா ஜாவி திடீரென கோவாவில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தனது காதலருடன் கோவாவில் உள்ள விடுதி ஒன்றில் அலெக்சாண்டரியா ஜாவி தங்கி இருந்ததாகவும் காதலருடன் திடீரென ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மன உளைச்சலில் இருந்த அலெக்சாண்டரியா ஜாவி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment