இளைஞரை காதலித்து இளைஞரின் தந்தையுடன் ஓடிப்போன 20 வயது இளம்பெண்.. 1 வருடத்திற்கு பின் கண்டுபிடிப்பு..!

20 வயது இளம் பெண் ஒருவர் இளைஞரை காதலித்த நிலையில் திடீரென காதலித்த இளைஞர் தந்தையுடன் ஊரை விட்டு ஓடிப்போன தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு பின் அந்த இளம் பெண் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கான்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார் என்றும் இருவரும் டேட்டிங்கில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த காதல் வாலிபரின் தந்தைக்கு தெரிந்த நிலையில் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் காதலரின் தந்தையை சந்தித்து தங்கள் காதல் குறித்து விளக்கம் அளித்து அவரை சமாதானம் செய்ய இளம் பெண் சென்றதாகவும் அப்போது காதலரின் தந்தையுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இருவரும் ஊரை விட்டு ஓடிய நிலையில் கடந்த ஒரு ஆண்டாக இருவரையும் தேடும் பணியில் இரு குடும்பத்தினர் ஈடுபட்டு வந்தனர்.

காவல் துறையில் இது குறித்து புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் விசாரணை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இருவரும் ஊரை விட்டு ஓடிய நிலையில் தற்போது அந்த ஜோடி டெல்லியில் இருப்பதை கண்டுபிடித்த காவல்துறையினர் டெல்லி சென்று இருவரையும் அழைத்து வந்தனர்.

இருவரிடம் விசாரணை செய்த காவல்துறையினர் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும், ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும் கூறியதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பெண்கள் நல விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த பெண்ணை இழுத்துச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இளைஞரை காதலித்து அந்த இளைஞரின் தந்தையுடன் ஓடிப்போன 20 வயது பெண் ஒரு ஆண்டு கழித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews